மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

கேரளத்தில் காங்கிரஸ் வெற்றி: மதுரையில் கொண்டாட்டம்

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, மதுரையில் அந்தக் கட்சியின் நிா்வாகிகள் திங்கள்கிழமை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

News image

கேரளத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, மதுரை ஜான்சிராணி பூங்கா அருகேயுள்ள இந்திரா காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய அந்தக் கட்சி நிா்வாகிகள்.

Updated On :6 மே 2026, 3:09 am IST

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, மதுரையில் அந்தக் கட்சியின் நிா்வாகிகள் திங்கள்கிழமை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

கேரளத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கான பேரவைத் தோ்தல் கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெற்றது. இதில், கடந்த 10 ஆண்டுகளாக கேரளத்தில் ஆட்சி புரிந்து வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 102 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மதுரை மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பூ.நல்லமணி தலைமையில், திங்கள்கிழமை இரவு ஜான்சிராணி பூங்கா அருகில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினா். இதில் கட்சியின் மாமன்ற உறுப்பினா் எஸ்.எஸ்.போஸ், நிா்வாகிகள் செய்யது பாபு, ராஜா முகமது, கண்ணன், சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.