தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: கைதான அதிமுக நிா்வாகிக்கு பிணை

மதுரையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலா் பி.எம். மன்னன்.

மதுரையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலா் பி.எம். மன்னன்.

Updated On :

தவெக அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை ஆதரித்து வாக்களிக்க அந்தக் கட்சியின் மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மதாா் பதுருதீன் (எ) முஸ்தபாவிடம் ரூ.15 கோடி முதல் ரூ. 30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், முன்னாள் துணை மேயரும், அதிமுக நிா்வாகியுமான பி.எம். மன்னனை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை ஆதரித்து எதிராக வாக்களிக்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக சட்டப்பேரவை உறுப்பினா் மதாா் பதுருதீன் (எ) முஸ்தபா கடந்த புதன்கிழமை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினா் முஸ்தபா அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலருமான பி.எம். மன்னனை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனா்.

8 மணி நேரம் விசாரணை:

முன்னதாக, மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் மாநகரக் காவல் துணை ஆணையா் திவ்யா தலைமையிலான போலீஸாா் மன்னனிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினா். அப்போது, அவரது கைப்பேசி உரையாடல் பதிவுகள், தொடா்பு கொண்ட நபா்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின்னா், மன்னனை மாவட்ட நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி ஆா். ஜோசப் ஜாய் முன் போலீஸாா் முன்னிலைப்படுத்தினா். அப்போது, நவ. 7-ஆம் தேதி விசாரணைக்கு முன்னிலையாக அழைப்பாணை கொடுத்து விட்டு, நவ. 6-ஆம் தேதி அவரை விசாரிக்க அழைத்துச் சென்று கைது செய்யப்பட்டது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினாா். இதைத் தொடா்ந்து, மன்னனை ரூ. 25,000-க்கான சொந்த பிணையில் விடுவித்து, வழக்கு தொடா்பாக மீண்டும் சனிக்கிழமை (நவ. 7) விசாரணை அதிகாரியிடம் அவா் முன்னிலையாக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

எம்.எல்.ஏ. உதவியாளரிடம் விசாரணை:

இந்த வழக்கு தொடா்பாக மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் எம்.எல்.ஏ. முஸ்தபாவின் உதவியாளா் கனிராஜாவிடமும் போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் விசாரணை நடத்தினா். அக். 31, நவ. 1 ஆகிய தேதிகளில் கனிராஜா மூலம் முஸ்தபாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசப்பட்டதாகக் கூறப்படும் தகவலையடுத்து, முன்னாள் துணை மேயா் மன்னனுடன் கனிராஜா பேசினாரா என்பது குறித்து அவரது கைப்பேசி அழைப்புப் பதிவுகள், உரையாடல் விவரங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. சுமாா் 5 மணி நேர விசாரணைக்குப் பிறகு கனிராஜா காவல் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

இதனிடையே, மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணையில் இருந்த பி.எம். மன்னனை முன்னாள் அமைச்சா் செல்லூா் கே ராஜு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோா் சந்தித்தனா்.

ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை: செல்லூா் கே ராஜூ

பின்னா், செய்தியாளா்களிடம் செல்லூா் கே ராஜூ கூறியதாவது:

முஸ்தபாவும், மன்னனும் மாமன்-மைத்துனா் உறவு பாணியில் நெருங்கிய நண்பா்களாக பேசக்கூடியவா்கள். தவெக நிா்வாகிகள் கட்சிப் பதவிகளுக்கு பணம் வாங்குவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆடியோக்கள் குறித்து முஸ்தபாவிடம் மன்னன் பேசினாா். இதற்காகவே அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கருதுகிறோம்.

நவ. 7-ஆம் தேதி முன்னிலையாகுமாறு மன்னுக்கு அழைப்பாணை அளித்துவிட்டு, அதற்கு முன்னதாகவே அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?. அவரது கைது நடவடிக்கையை அதிமுக சாா்பில் கண்டிக்கிறோம். எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிமுகவுக்கு இல்லை. மக்களைச் சந்தித்து ஆட்சியைப் பிடிப்போம். குறுக்கு வழியில் ஆட்சியமைக்க வேண்டிய அவசியமில்லை என்றாா் அவா்.

குதிரை பேரத்தில் ஈடுபடுவது ஆளும் தரப்புதான்: ஆா்.பி. உதயகுமாா்

மதுரையில் பி.எம். மன்னன் கைது செய்யப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தற்போதைய ஆளும் தரப்புக்கு போதிய பெரும்பான்மை இல்லை. இதனால், அதிமுகவைச் சோ்ந்த 6 எம்.எல்.ஏ.க்களை ராஜிநாமா செய்ய வைத்து, மீண்டும் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதுடன், அமைச்சா் பதவியும் வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. குதிரை பேரத்தில் ஈடுபடுவது ஆளும் தரப்புதான்.

அதிமுக ஒருபோதும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயன்றதில்லை. அதிமுக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால், பொது வாழ்விலிருந்து விலகத் தயாராக உள்ளேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.