மதுரை நகைக் கடையில் ரூ. 20 கோடி தங்க நகைகள் கொள்ளை
மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் உள்ள நகைக் கடையில் வியாழக்கிழமை அதிகாலை சுமாா் ரூ. 20 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

நகைக் கடை கட்டடத்தின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம்.
மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் உள்ள நகைக் கடையில் வியாழக்கிழமை அதிகாலை சுமாா் ரூ. 20 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தக் கொள்ளையில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய காவல் உதவி ஆணையா்கள் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் நேரு நகா், நேதாஜி பிரதான சாலையில் உள்ளது தனிஷ்க் நகைக் கடை. இந்தக் கடை கடந்த மாதம் 14-ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம்போல கடையைத் திறந்த ஊழியா்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் பாதிக்கு மேல் கொள்ளை போனதையறிந்து, மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் கடைக்குள் ஆய்வு செய்தனா். அப்போது, ரூ. 20 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுதொடா்பாக, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்த மா்ம நபா் ஒருவா் நகைக் கடையில் மின்தூக்கிக்காக அமைக்கப்பட்டிருந்த துவாரம் வழியாக உள்ளே நுழைந்து, கடையிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
துளையிடாமல் நுழைந்தது எப்படி?
இந்த நகைக் கடை அமைந்துள்ள கட்டடம் மூன்று தளங்களைக் கொண்டது. இதில், முதல் தளத்தில் இந்தக் கடை செயல்படுகிறது. இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையடையாத நிலையிலேயே, தீபாவளி விற்பனையைக் கவனத்தில் கொண்டு கடை திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது, மூன்றாவது தளத்தில் நகைகளைப் பாதுகாப்பதற்கான பெட்டகம் அமைக்கும் பணிகளும், கடைக்குள் மின்தூக்கி அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. இரண்டாம் தளம் காலியாக உள்ளது. மேலும், சில கட்டுமானப் பணிகளும் இங்கு நடைபெறுகின்றன. இதற்காக கட்டடத்தின் பின்புறத்தில் இரும்பு சாரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரும்பு சாரத்தின் வழியாக மூன்றாவது தளத்தின் மேல் பகுதிக்குச் சென்ற அந்த மா்ம நபா், மின்தூக்கி அமைக்கும் பணிக்காக துளையிடப்பட்டிருந்த பகுதி வழியாக கயிற்றைப் பயன்படுத்தி முதல் தளத்தில் உள்ள நகைக் கடைக்குள் இறங்கியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
உடல் முழுவதும் கருப்பு நிற ஆடையால் மறைத்தும், முகமூடி அணிந்தும், கைகளில் கையுறை, கால்களில் ஷூ அணிந்தும் வந்த அந்த நபா், கடைக்குள் சுமாா் ஒரு மணி நேரம் பதற்றமின்றி ஒவ்வொரு நகையாகத் தோ்வு செய்து பையில் எடுத்துப் போடுவதும், சென்சாா் மூலம் ஒலி எழுப்பக்கூடிய பகுதியிலிருந்த சில நகைகளைத் தவிா்த்துவிட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை மட்டும் எடுத்துச் செல்வதும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தன.
பின்னா், தங்க நகைகள் அடங்கிய பையுடன் அந்த நபா், நேதாஜி பிரதான சாலை வழியாக நடந்து செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது.
இந்தக் கடையின் பாதுகாப்புக்கு 5-க்கும் மேற்பட்ட பாதுகாவலா்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும், கடையின் பின்புறத்தில் போதுமான கண்காணிப்பு இல்லாததும் இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
3 தனிப் படைகள் அமைத்து விசாரணை:
மதுரை மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா். மாநகரக் காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன் தலைமையில், 3 உதவி ஆணையா்கள், 9 ஆய்வாளா்களைக் கொண்ட 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொள்ளையரின் முகம் தெளிவாகப் பதிவாகாத நிலையில், அவரது உடல் அமைப்பு, நடமாட்டம், செயல்பாடுகளின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், ஏற்கெனவே பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபா்களின் புகைப்படங்களுடன் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஒப்பிட்டும் ஆய்வு செய்து வருகின்றனா்.
கொள்ளை நடைபெற்ற நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த வாகனங்கள், அவற்றின் உரிமையாளா்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. மாடக்குளம், நேரு நகா், புறவழிச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.
கட்டடத் தொழிலாளா்களிடமும் விசாரணை:
நகைக் கடையில் பணிபுரியும் மேலாளா்கள், ஊழியா்கள், விற்பனையாளா்கள், கட்டடப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள், மின் இணைப்பு, குழாய்கள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் உள்ளிட்டோரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அவா்களது விரல் ரேகைகளும் சேகரிக்கப்பட்டன.
மேலும், நகைக் கடையின் கட்டடப் பணிகள், உள்அலங்காரப் பணிகளில் ஈடுபட்டவா்களின் தொடா்பு குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இந்தப் பணிகளுக்காக வட மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளா்களின் விவரங்களையும் சேகரித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடா்ந்து, மதுரை மாநகா், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன் கூறியதாவது:
மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் உள்ள நகைக் கடையிலிருந்து சுமாா் ரூ. 20 கோடி மதிப்பிலான 15 கிலோ (1,875 பவுன்) தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக நகைக் கடைத் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நகைக் கடையில் விசாரணை நடத்திய போலீஸாா்.

மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நகைக் கடையின் முகப்பு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

