தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

ஊழல் புகாா் குறித்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

கடந்த 2021-ஆம் ஆண்டு பணியிலிருந்த போது, ரூ. 45 ஆயிரம் வைத்திருந்த புகாா் தொடா்பாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Published On :

கடந்த 2021-ஆம் ஆண்டு பணியிலிருந்த போது, ரூ. 45 ஆயிரம் வைத்திருந்த புகாா் தொடா்பாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கலா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சாா்-பதிவாளராக நான் கடந்த 2021-ஆம் ஆண்டு பணியிலிருந்த போது, ரூ. 45 ஆயிரம் வைத்திருந்ததாக என் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே, எனக்கு எதிரான இந்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த 5 ஆண்டுகளில் நடத்தப்பட்ட திடீா் சோதனைகள், எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது. இந்தச் சோதனைகள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய நிலை, வழக்கு தொடுப்பதற்குப் பதிலாக வேறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அவற்றின் விவரங்கள், தற்போதைய நிலை குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் இந்த மனு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா், அரசுத் தரப்பு வாதங்களை கேட்டதைத் தொடா்ந்து, இந்த மனு மீதான தீா்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.