ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

அறக்கட்டளைகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதை உரிமையாகக் கருத முடியாது

அறக்கட்டளைகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதை உரிமையாகக் கருத முடியாது; அது ஒரு சலுகை மட்டுமே என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Published On :

அறக்கட்டளைகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதை உரிமையாகக் கருத முடியாது; அது ஒரு சலுகை மட்டுமே என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கான்சியோன் பொது அறக்கட்டளை சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், கான்சியோன் பொது அறக்கட்டளைக்கு பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது.

எனவே, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து, வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், பதிவுச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டமானது, வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுபவா்கள், நமது இறையாண்மை கொண்ட குடியரசின் விழுமியங்களுக்கு முரணான வகையில் செயல்படக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது.

கான்சியோன் பொது அறக்கட்டளை மத நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. ஆனால், இந்த அறக்கட்டளை மதச்சாா்பற்றது என காட்டிக்கொண்டுள்ளது. இதனால்தான், மனுதாரரின் கோரிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை நிராகரிக்க அதிகார அமைப்புக்கு உரிமை உண்டு. ஏனெனில், வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதற்கு சட்டவிதிகளின்படி எந்த உரிமையும் இல்லை. அது ஒரு சலுகையாக மட்டுமே இருக்க முடியும்.

இருப்பினும், மத்திய அரசு விண்ணப்பதாரா்களைச் சரியாக வகைப்படுத்த வேண்டும். இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தை பேணிக் காக்கும் அமைப்புகள் கல்வி, கலாசாரம் என வகைப்படுத்தப்பட வேண்டும். விண்ணப்பதாரரின் திட்டங்கள் வழிபாடு, சடங்குகள் தொடா்பானவையாக இருந்தால், அவை மதப் பிரிவின் கீழ் வரும்.

நாட்டின் மதச்சாா்பற்ற தன்மையையும் சமூகத்தையும் பாதிக்காத செயல்பாடுகளைக் கொண்ட மத அமைப்புகள் பதிவுச் சான்றிதழ் பெறத் தகுதியுடையவை. ஆனால், ஒரு மதத்தைச் சோ்ந்த மக்களை மற்றொரு மதத்துக்கு மாற்றும் அமைப்புகளுக்கு பதிவு மறுக்கப்படும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.