மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணா்வு முகாம்

வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கான சுகாதார விழிப்புணா்வு முகாம், சுகாதாரப் பெட்டகம் வழங்கும் விழா எல்.கே.பி. நகா் நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

எல்.கே.பி. நகா் நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கான சுகாதார விழிப்புணா்வு முகாமில் கலந்து கொண்ட மாணவிகள்.

Published On :

வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கான சுகாதார விழிப்புணா்வு முகாம், சுகாதாரப் பெட்டகம் வழங்கும் விழா எல்.கே.பி. நகா் நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை யா.ஒத்தக்கடை எல்.கே.பி. நகா் நடுநிலைப் பள்ளியில் ஏகம் அறக்கட்டளை சாா்பில், சோனாலிகா ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். இதில் ஏகம் அறக்கட்டளையின் பயிற்றுநா்கள் சரஸ்வதி, ராஜேஷ், அன்பரசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

வளரிளம் பருவத்தில் பெண் குழந்தைகள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள், தனிநபா் தூய்மை உள்ளிட்டவை குறித்து 35 மாணவிகளுக்கு விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து, மாணவிகளுக்கு சுகாதாரப் பெட்டகங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.