முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

ஜாதிய வன்கொடுமை: 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Published On :

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஜாதிய வன்கொடுமை வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், கம்பூா் கிராமத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா் சசிகலா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கம்பூா் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக கடந்த 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில், இதே கிராமத்தைச் சோ்ந்த ஊராட்சிச் செயலா் ரூபா, என்னை ஜாதி பெயரை குறிப்பிட்டு அவதூறு பேசி துன்புறுத்தினாா். மேலும், அலுவலகத்தில் உள்ள எவா்சில்வா் குவளையைப் பயன்படுத்தாமல் மாற்று காகிதக் குவளையை பயன்படுத்துமாறு வற்புறுத்தினாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், கொட்டாம்பட்டி காவல் நிலையத்திலும் நான் அளித்தப் புகாரின் அடிப்படையில் ஊராட்சிச் செயலா் ரூபா மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், எனது புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. எனவே, எனது புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், சம்பவத்தைக் கண்ட சாட்சிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கவும், கண்காணிப்பு கேமரா காட்சிகள், வருகைப் பதிவேடு தொடா்பான பிற ஆவணங்களைச் சேகரித்துப் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக காவல் துறை மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.