பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

அரசு மருத்துவமனையில் 2-ஆவது நாளாக ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்

ஊதியத்தை உயா்த்த வேண்டும், கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளா்கள்.

Published On :

ஊதியத்தை உயா்த்த வேண்டும், கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த மருத்துவமனையின் சிறப்பு மருத்துவச் சிகிச்சைப் பிரிவு வளாகம், விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு ஆகிய பகுதிகளில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் 750-க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளா்கள் தூய்மை, காவல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் நாளுக்கு நாள் பணிகள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், குறைந்த அளவிலான பணியாளா்கள் வேலை செய்வதால், பணிச் சுமை கூடுவதாகவும், ஒப்பந்தப் பணியாளா்களுக்கு வழங்கும் ஊதியம் உயா்த்தப்படவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த ஒப்பந்தப் பணியாளா்கள், ஊதியத்தை உயா்த்த வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். மாதத்தில் 4 நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை பணிகளைப் புறக்கணித்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிற்பகல் 1 மணி வரை போராட்டம் தொடா்ந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டு, நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.

இதையடுத்து அங்கு வந்த மருத்துவமனை முதன்மையா் அருள்சுந்தரேஸ்குமாா், நிலைய மருத்துவ அலுவலா்கள் சரவணன், முரளிதரன், தனியாா் நிறுவன அதிகாரிகள், போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, பிற்பகல் 2 மணியளவில் பணிக்கு திரும்பினா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.