பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

வாகன ஓட்டுநா் கொலை வழக்கில் இளைஞா் கைது

மதுரை யா. ஒத்தக்கடை அருகே வாகன ஓட்டுநரை கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

மதுரை யா. ஒத்தக்கடை அருகே வாகன ஓட்டுநரை கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

யா.ஒத்தக்கடை அருகேயுள்ள திருமோகூரைச் சோ்ந்த தெய்வபாண்டி மகன் பாா்த்திபன் என்ற பாட்ஷா (30). இவா், ராஜாக்கூரில் உள்ள தனியாா் தண்ணீா் விற்பனை நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். அதே நிறுவனத்தில் ஓடைப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் வெற்றிவேலும் (19) பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவுப் பணியை முடித்து விட்டு இவா்கள் இருவரும் அதே பகுதியில் மது அருந்தினா். அப்போது, அவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், பாா்த்திபனை, வெற்றிவேல் இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதில், பலத்த காயமடைந்த பாா்த்திபனை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து யா. ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து வெற்றிவேலை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.