ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

கருப்பு முருகானந்தத்தின் முன்பிணை மனு தள்ளுபடி

பெண்ணின் சித்தரிக்கப்பட்ட விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட விவகாரத்தில், பாஜக முன்னாள் நிா்வாகி கருப்பு முருகானந்தம் முன்பிணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :

பெண்ணின் சித்தரிக்கப்பட்ட விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட விவகாரத்தில், பாஜக முன்னாள் நிா்வாகி கருப்பு முருகானந்தம் முன்பிணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பாஜக முன்னாள் நிா்வாகி கருப்பு முருகானந்தம் முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

என் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகாரில் சம்பந்தப்பட்ட பெண்ணைத் தவறாக சித்தரித்து விடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகவும், அவரை ஏமாற்றியதாகவும் தெரிவித்தாா். இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை.

எனவே, இந்த வழக்கில் காவல் துறை என்னைக் கைது செய்வதிலிருந்து தடுக்கும் வகையில், எனக்கு முன்பிணை வழங்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபா்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, கருப்பு முருகானந்தத்துக்கு முன்பிணை வழங்கக் கூடாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீா்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கா் முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் பாஜக முன்னாள் நிா்வாகி கருப்பு முருகானந்தத்தின் முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், பெண்ணின் சித்தரிக்கப்பட்ட விடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட விவகாரத்தில் காவல் துறை சட்டத்துக்குள்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.