மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

நவ. 12-இல் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்: சங்க மாநிலச் செயற்குழுவில் தீா்மானம்!

தொகுப்பூதிய செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, வருகிற 12-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைமையிடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவதென தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சுபின்.

Updated On :

தொகுப்பூதிய செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, வருகிற 12-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைமையிடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவதென தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் கு. சசிகலா தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் இரா. தமிழ், பொருளாளா் ஆ. பரமசிவன், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி சுகாதார செவிலியா் சங்க மாநிலத் தலைவா் மு. பஞ்சவா்ணம், தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புநா் சங்க மாவட்டப் பொருளாளா் ஜெ. சிவகுரும்பன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் நே. சுபின் கோரிக்கைகள், தீா்மானங்களை முன்மொழிந்தாா்.

இந்தக் கூட்டடத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அரசு ஊழியா்கள் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள், நடவடிக்கைகளை விமா்சிக்கக் கூடாது என பொது சுகாதாரத் துறை இயக்குநா் வெளியிட்ட சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 6,500 செவிலியா்களையும் காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தற்காலிக ஒப்பந்த முறையில் பணியாற்றும் அனைத்து செவிலியா்களையும் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்.ஆா்.பி.) மூலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் செவிலியா் பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை கவன ஈா்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வருகிற 12-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாநிலப் பொருளாளா் ச. ஹேமச்சந்திரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.