விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், குப்பைகள் தரம் பிரித்து பெறும் பணியைத் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா். உடன் மேயா் தி. நாகராஜன் உள்ளிட்டோா்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:55 am IST

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026- இன் கீழ் வீடுகளிலிருந்து

பெறப்படும் குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து பெறும் பணி தொடக்க விழா மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் பணியை தொடங்கி வைத்து ஆணையா் கௌரவ்குமாா் பேசியதாவது:

வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை ஈரக்கழிவு, உலா் கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்புக் கவனிப்புக் கழிவு என தரம் பிரித்து வழங்க மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் கீழ் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்காக, பச்சை,நீலம், சிவப்பு, கருப்பு நிறங்களில் குப்பைத் தொட்டிகள் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. குப்பைகளைத் தரம் பிரித்து அதிகளவு வழங்குவோரை கண்டறிய சேது பொறியியல் கல்லூரி தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் ‘க்யூஆா் கோடு’ ஒட்டும் பணி நடைபெறுகிறது. தினமும் குப்பைகளை நான்கு வகைகளாக பிரித்து வழங்கும் வீடுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். மதிப்பெண் அடிப்படையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், துணை ஆணையா் ராஜாராம், உதவி ஆணையா் குமரன், நகா் நல அலுவலா் அரவிந்த் ஜோதி, உதவி நகா் நல அலுவலா் அபிஷேக், சுகாதாரஅலுவலா் திருமால், சேது பொறியியல் கல்லூரியின் முகமது ஜலீல், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.