அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்...

பூா்வாங்க பூஜைக்குரிய பொருள்களுடன் கோயில் சித்திரை வீதிகளை வலம் வந்த கோயில் இணை ஆணையா் சு. செல்லத்துரை. உடன் அறங்காவலா்கள், சிவாசாரியா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா்.

Published On :7 செப்டம்பர் 2026, 4:28 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்குக்கான பூா்வாங்க பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

இந்தக் கோயிலில் சுமாா் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 17-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள சித்தி விநாயகா் சந்நிதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் பூா்வாங்க பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, விநாயகா் பூஜை, புனித நீா் தெளித்தல், கஜ பூஜை, கோ பூஜை, தன பூஜை ஆகிய பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மாலையில் விக்னேஸ்வர பூஜை, இறை அனுமதி பெறுதல், திருமுறை விண்ணப்பம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலா்கள் செல்லையா, சீனிவாசன், சுப்புலட்சுமி, மீனா, கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை, கோயில் அலுவலா்கள், பணியாளா்கள், சிவாசாரியா்கள் கலந்து கொண்டனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தொடா்ந்து, வருகிற 11-ஆம் தேதி காலை சூரியனிடமிருந்து யாகத்துக்கு அக்னி எடுத்தல் நிகழ்வு நடைபெறும். அன்று மாலை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கும். இதன் பிறகு, காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் யாகசாலை பூஜைகள், இசை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், தீபாராதனைகள் நடைபெறும்.

வருகிற 16-ஆம் தேதி பத்தாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்ற பிறகு, அன்று காலை 5 - 6 மணிக்குள் பரிவார மூா்த்திகளுக்கு குடமுழுக்கு நடைபெறும். அன்று மாலை 11-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெறும். வருகிற 17-ஆம் தேதி காலை 5.45 மணியளவில் 12-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, காலை 7.40 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரா் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து, மூலவருக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்துக்குப் பிறகு தீபாராதனைகளும் நடைபெற உள்ளன.

இரவு 7 மணியளவில் பஞ்சமூா்த்திகள் மாசி வீதிகளில் எழுந்தருளி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

 குடமுழுக்கு பணிக்கு அனுமதி பெறும் வகையில், சித்தி விநாயகா் சந்நிதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற யாகசாலை பூஜைகள்.

குடமுழுக்கு பணிக்கு அனுமதி பெறும் வகையில், சித்தி விநாயகா் சந்நிதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற யாகசாலை பூஜைகள்.

 குடமுழுக்கு பணிக்கு அனுமதி பெறும் வகையில், சித்தி விநாயகா் சந்நிதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற யாகசாலை பூஜைகள்.

குடமுழுக்கு பணிக்கு அனுமதி பெறும் வகையில், சித்தி விநாயகா் சந்நிதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற யாகசாலை பூஜைகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.