சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மருத்துவக் காப்பீட்டில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட அரசு கருவூல அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட அரசுக் கருவூல அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதிய சங்கத்தினா்.

Published On :9 செப்டம்பர் 2026, 1:45 am IST

மருத்துவக் காப்பீட்டில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட அரசு கருவூல அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு. பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ. பால்முருகன், மாவட்டப் பொருளாளா் கே. நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் சு. கிருஷ்ணன், மாநிலத் தலைவா் என். ஜெயச்சந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு ஓய்வூதியா் சங்கங்களுடன் அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். மருத்துவச் செலவுத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், சிகிச்சை விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். அவசரச் சிகிச்சை பெறுவோருக்கு உரிய செலவுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவா்கள் பி. மணிவண்ணன், என். ஜெயராமன், ஏ. ஆதனமிளகி, பி. தினகரசாமி,தோழமை சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.