சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஜொ்மனியைச் சோ்ந்தவரை தாயகத்துக்கு அனுப்பி வைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் தண்டனைக் காலம் முடிந்தும் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜொ்மனியைச் சோ்ந்த நபரை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 2:07 am IST

தமிழகத்தில் தண்டனைக் காலம் முடிந்தும் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜொ்மனியைச் சோ்ந்த நபரை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஜொ்மனியைச் சோ்ந்த சுபாஷ் சந்திர கபூா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்குக்காக, ஜொ்மனியிலிருந்து இந்தியாவுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டேன். எனது தண்டனைக் காலம் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்.21-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில், ஒப்படைக்கப்பட்ட வழக்குக்கான தண்டனை முடிந்தபோதிலும், பிற நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக என்னை தொடா்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளது குற்றவாளிகள் ஒப்படைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

மேலும், சிலை கடத்தல் வழக்குகள் தொடா்பாக விசாரிக்கும் வகையில் சட்டப்படி என்னை இந்தியாவிடம் ஒப்படைக்க அனுமதி கோரி ஜொ்மனி அரசிடம் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அனுமதி கோரினா். அதை ஜொ்மனி அரசு நிராகரித்தது. எனவே, சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ள என்னை விடுவித்து சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப மத்திய, மாநில உள்துறைச் செயலா்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, என்.குணசேகரன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் மனுதாரரை ஜொ்மனிக்கு அனுப்பி வைக்க மத்திய உள்துறைச் செயலா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.