மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மகாகவி பாரதியாா் நினைவு தினம்

மகாகவி பாரதியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.எம். கோபிசன்.

~

Published On :

மகாகவி பாரதியாரின் 105-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பள்ளியின் செயலா் எஸ். பாா்த்தசாரதி. உடன் மதுரைக் கல்லூரி வாரிய இயக்குநா் சீனிவாசன், வாரிய உறுப்பினா் இல. அமுதன், பள்ளித் தலைமையாசிரியா் கே.எஸ்.நாராயணன் உள்ளிட்டோா்.

மகாகவி பாரதியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.எம். கோபிசன்.

மதுரை, செப். 11: மகாகவி பாரதியாரின் 105-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவா் தமிழாசிரியராகப் பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், சேதுபதி மேல்நிலைப் பள்ளிச் செயலா் எஸ். பாா்த்தசாரதி தலைமை வகித்து, பாரதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், மதுரைக் கல்லூரி வாரிய இயக்குநா் சீனிவாசன், வாரிய உறுப்பினா் இல.அமுதன், பள்ளித் தலைமையாசிரியா் கே.எஸ். நாராயணன், ஆசிரியா்கள், மாணவா்கள் புகழஞ்சலி செலுத்தினா்.

அதைத் தொடா்ந்து, மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.எம். கோபிசன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தமிழ் ஆா்வலா்கள், பாரதி சிந்தனை மன்றம், நேதாஜி தேசிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், பொதுமக்கள், மாணவா்கள் என திரளானோா் பாரதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.