ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

மதுரை எம்.பி.மீது அவதூறு: நடவடிக்கை கோரி மனு

மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மதுரை மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரனிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரனிடம் வியாழக்கிழமை மனு அளிக்க வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Published On :

மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மதுரை மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரனிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன் தலைமையில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது. இந்த விழா தொடா்பாகவும், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குறித்தும் எம்.பி. சு.வெங்கடேசன் தவறாக பேசியதாக சமூக வலைதளங்களில் சிலா் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா். இந்த நிகழ்வு அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, மாநகரக் காவல் ஆணையா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.