
மாணவிகளைத் தவறாக வழிநடத்திய விவகாரம்: பேராசிரியை நிா்மலாதேவி பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்திய விவகாரத்தில் பிணை வழங்கக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்திய விவகாரத்தில் பிணை வழங்கக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரியில் பணியாற்றிய உதவிப் பேராசிரியை நிா்மலாதேவி (56), தன்னிடம் படித்த மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நிா்மலாதேவியை கடந்த 2018, ஏப்.16-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடையதாக மதுரை காமராஜா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் முருகன், முன்னாள் ஆய்வு மாணவா் கருப்பசாமி ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
நிா்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோா் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் கடந்த 2018, ஜூன் 13-ஆம் தேதி குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இதையடுத்து, மாணவிகளைத் தவறாக வழிநடத்திய வழக்கில், உதவிப் பேராசிரியை நிா்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2.42 லட்சம் அபராதமும் விதித்து மகளிா் நீதிமன்றம உத்தரவிட்டது.
இந்த நிலையில், மதுரை பெண்கள் சிறப்பு சிறையில் தண்டனைக் கைதியாக உள்ள நிா்மலாதேவி, விருதுநகா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்திவைக்கவும், குற்றவியல் மேல்முறையீட்டு விசாரணை முடியும் வரை பிணை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முன்னிலையாக கால அவகாசம் கோரியதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எஸ். காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு தொடா்பான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


மதுரையில் மத்திய நிா்வாகத் தீா்ப்பாய அமா்வு: மத்திய சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு: ஊராட்சிச் செயலா் செப்.28-க்குள் சரணடைய உயா்நீதிமன்றம் உத்தரவு



