முதுகுளத்தூர் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது.
முதுகுளத்தூரில் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்குள் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் பாலகுருசாமி ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் குருநாதர் காத்தாகுளம் அ.திருமால் தலைமை வகித்தார். உதவி குருநாதர் பி.முருகானந்தம், கோயில் நிர்வாகி கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐயப்பன் சிலைக்கு 18 வகையான அபிஷேகம், 508 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. திருவிளக்குப் பூஜையை சற்குநாதர் எஸ்.பாலகுருசாமி தொடங்கி வைத்தார். மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதனை ராமநாதபுர தேவஸ்தான நர்வாக செயலர் திவான் வி.மகேந்திரன் தொடக்கி வைத்தார். மாலையில் மலர்களால் அலங்கரிக்ப்பட்ட ஐயப்பன் முக்கிய வீதிகளில் உலா வந்ததார்.
விழா ஏற்பாட்டினை பாலகுருசாமி ஐயப்ப பக்தர்கள் நிர்வாகக்குழு செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.