தனுஷ்கோடியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: தெலங்கானாவைச் சேர்ந்த 28 பேர் கைது

தனுஷ்கோடி அரிச்சல்முனையில் அசோகச் சக்கரம் பொறித்த ஸ்துபியில் கருப்புக் கொடி கட்டி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில்
Updated on
1 min read

தனுஷ்கோடி அரிச்சல்முனையில் அசோகச் சக்கரம் பொறித்த ஸ்துபியில் கருப்புக் கொடி கட்டி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதெலங்கானா மாநில தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் 28 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
  ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இந்திய அரசின் முத்திரையான அசோகச் சக்கரம் பொறித்த ஸ்தூபி உள்ளது.  
இங்கு தெலங்கானா மாநிலம் சக்கரபல்லி பகுதியைச் சேர்ந்த தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் புதன்கிழமை வந்தனர். அவர்கள்  மத்திய அரசின் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றைக் கண்டித்து ஸ்தூபியில் கருப்புத் துணியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அந்த அமைப்பின் தெலங்கானா மாநிலத் தலைவர் கைலாபாபு தலைமையில் 2 பெண்கள் உள்பட 28 பேர் பங்கேற்றனர்.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com