பாம்பன் சாலைப் பாலத்தில் வாகனங்கள் நிறுத்தத்தால் விபத்து அபாயம்
பாம்பன் சாலைப் பாலத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.


பாம்பன் சாலைப் பாலத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.
பாம்பன் சாலை மேம்பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு, கடலின் அழகை அங்கிருந்து ரசிக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுவதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
எனவே, பாம்பன் சாலைப் பாலத்தில் வாகனங்கள் நிறுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. மேலும், ரூ. 600 வரையில் அபராதம் விதிக்கப்படும் என பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், காவல் துறையினர் வியாபாரம் மேற்கொண்டு வரும் இரண்டு வாகனங்களை நிறுத்த அனுமதி அளித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல் துறையினரே வாகனங்களை நிறுத்த அனுமதி அளித்துள்ளனர். இதனால், தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...