கமுதியில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் இரவு நேர மதுக் கூடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கமுதி கண்ணார்பட்டியில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் உள்ளது. இதில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இவற்றுக்குப் பதிலாக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு அலுவலகங்கள் அதில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் சேதமடைந்த கட்டடங்களை அகற்றக் கோரி புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் இவற்றில் கஞ்சா, மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். வெளியூர்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இதனுள் வந்து பதுங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும் சுவர்களை சேதப்படுத்தி, வளாகத்திற்குள் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைவதால், அலுவலக பொருள்கள் கொள்ளை போகும் அபாயமும் உள்ளது.
அதேபோல் அலுவலகத்தை சுற்றிலும், சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைத்து, சேதமடைந்த கட்டடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






