திருவாடானை அருகே குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாவதாகவும், அதை உடனே சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக அப்பகுதியில் குழாய் அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குழாய் சேமடைந்து குடிநீர் வீணாகிறது. மேலும், அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் அப்பகுதியில் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது கோடை காலம் நெருங்குவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து இதை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.