திருவாடானை அருகே கிராம நிர்வாக அலுவலர் நீண்டகாலமாக வராததால் அவரது அலுவலகம் ஊராட்சி குப்பை வண்டிகளை நிறுத்தும் இடமாக மாறிவிட்டது.
திருவாடானை தாலுகா பாகனூர் குரூப் கிராம நிர்வாக அலுவலருக்கான அலுவலகம் பாகனூர் கிராமத்தில் உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராம குரூப்பில் உள்ள அலுவலகத்தில் தான் இருந்து பணியாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், திருவாடானை தாலுகாவில் ஒருசில குரூப் கிராம நிர்வாக அலுவலகங்களைத் தவிர மற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு செல்லாமல் திருவாடானையில் தனியாக அறை எடுத்து தங்கியிருப்பதாகவும் அங்கு பொது மக்களை வரவழைத்து அலைக்கழிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதே போல் பாகனூர் கிராம நிர்வாக அலுவலரும் இந்த பாகனூரில் உள்ள அலுவலக கட்டடத்திற்கு வருவது கிடையாதாம்.
ஆனால் ஆண்டு தோறும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அலுவலகத்தை புதுப்பிப்பதாகக் கூறி பல ஆயிரம் ரூபாயை செலவு செய்வதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் பாகனூர் கிராம நிர்வாக அலுவலர் வராததால் ஊராட்சி நிர்வாகம் அந்த அலுவலகத்தில் குப்பை வண்டியை நிறுத்தி வைத்துள்ளது.
எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்

வியக்க வைக்கும் வெட்டாறு பாலம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் குளிர்ச்சியடைய...
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜா்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


