பரமக்குடி அருகே குளம் ஒன்றில் திங்கள்கிழமை சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்ட டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்து சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
பரமக்குடி ஒன்றியம் உரப்புளி கிராமத்தில் குளம் ஒன்றில் அரசு அனுமதி பெறாமல் மணல் அள்ளப்படுவதாக சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரனிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தரத்தினேஸ்வரன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது ஜே.சி.பி. இயந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மணல் அள்ளிச் செல்லப்படுவது குறித்து போலீஸாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற போலீஸாரை கண்டதும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை நிறுத்தி விட்டு அதன் ஓட்டுநர்கள் தப்பி ஓடிவிட்டனர். 2 வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து, சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் என்.தீர்த்தரத்தினேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயிா் காக்கும் மருந்துகள் அதிக விலை தொடா்பான வழக்கு: விசாரணையை விரைவுபடுத்த கேரள உயா்நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தல்

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கம்: பிரதமா் மோடி பெருமிதம்
சாலையில் நின்ற லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
டெலிவரி பாய் படத்தின் செங்காத்தியே பாடல் வெளியீடு!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


