மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டத்தில், பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள்  உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Updated On :26 ஜூன் 2018, 6:45 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில், பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள்  உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 3000 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே பண்ணைக்குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தினை அணுகி பயனடையலாம். மேலும் மழையளவு குறைவின் காரணமாக வறட்சி ஏற்பட்டு, விளைச்சல் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், இதற்கு தீர்வாக வயல் வெளிகளில் பண்ணைக்குட்டைகள் அமைக்கலாம். இதனால் பெய்யும் மழைநீரை முறையாக சேமிப்பதன் மூலம் உரிய நேரத்தில் பயிர்களுக்கு உயிர்நீர் அளித்து, நல்ல மகசூல் பெறலாம். அதே வேளையில் பண்ணைக்குட்டைகளில் மீன்கள் வளர்த்து அதன் மூலம் கூடுதல் வருமானத்தையும் விவசாயிகள் பெறலாம்.
அத்துடன் மாவட்டத்தில் பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் (வே.பொ.) அலுவலகம் அல்லது மாவட்ட கருவூல கட்டடம் முதல் தளத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) அலுவலகம் அல்லது பரமக்குடி, கொல்லம்பட்டறை தெருவில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ.)  அலுவலகம் ஆகியவற்றில் தங்களது பட்டா நகல், அடங்கல் மற்றும் புலவரைபட நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.