கமுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 லாரிகள் பறிமுதல்; 3 பேர் கைது

கமுதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 வாகனங்களை பறிமுதல் செய்து, 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
Updated on
1 min read

கமுதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 வாகனங்களை பறிமுதல் செய்து, 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அருகே ஆனையூர் பகுதியில் விளைநிலங்களில் மணல் அள்ளப்படுவதாக பேரையூர் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸார் அப்பகுதியில் ரோந்து சென்றபோது
மணல் அள்ளியது தெரியவந்தது. பின்னர் விவசாய நிலத்தில் சோளம் பயிர்களுக்கு நடுவே மணல் அள்ளிய 3 டிப்பர் லாரிகள், 1 ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த அருண்குமார் மற்றும் ஓட்டுநர்கள் அசோக்குமார், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்து, தப்பி ஓடிய சுரேஷ்குமார் மற்றும் பழனி ஆகியோரை 
தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com