தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

ராமநாதபுரம் அருகே கல்லூரி மாணவர் விபத்தில் சாவு

ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில், கல்லூரி மாணவர் ஒருவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில், கல்லூரி மாணவர் ஒருவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
     ராமநாதபுரம் அருகே தெற்குத்தரவை கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் மனோஜ்குமார் (19). இவர், ராமநாதபுரம் அருகேயுள்ள எளமனூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பாப்பாகுடி கிராமத்துக்கும், களத்தாவூருக்கும் இடையே, எதிரே வந்த திருவாடானை தாலுகா கொத்திடல் கிராமத்தைச் சேர்ந்த மலைராஜ் மகன் ராஜ்குமார் (21) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேராக மோதியது. இதில், மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     இவர்,  மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 
    அதேநேரம், பலத்த காயமடைந்த ராஜ்குமார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
    இச்சம்பவம் குறித்து, ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.