கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

பரமக்குடி தீயணைப்பு நிலையப் பகுதியில்  குடிநீர் குழாய் உடைப்பு: 4 நாள்களாக குடிநீரின்றி பொதுமக்கள் தவிப்பு

பரமக்குடி தீயணைப்பு நிலையம் பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதால், கிழக்குப் பகுதியில் வசிக்கும்

Published On :

பரமக்குடி தீயணைப்பு நிலையம் பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதால், கிழக்குப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பரமக்குடி நகராட்சி ஆணையாளர் குடியிருப்பு பகுதியின் பின்புறம் உள்ள நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டியிலிருந்து பங்களா ரோடு, காமராஜர் நகர், திருவள்ளுவர் நகர், பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளுக்கு பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செளராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி நுழைவாயில் முன்பு பகிர்மான குழாயில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. இந்நிலையில் 
கடந்த 4 தினங்களுக்கு முன்பு சரிசெய்யப்பட்ட பகுதியிலேயே மீண்டும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் முழுவதும் 4 நாள்களாக வீணாக வெளியேறி வருகிறது. 
தொடர்ந்து 2 தினங்களாக மழை பெய்ததால் அப்பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் 
குடிநீர் குழாயை சரிசெய்யும் பணி தொடர்ந்து தாமதமாகி வருகிறது.  இதனால் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.அப்பகுதியில் வசிக்கும் மக்கள் லாரி மற்றும் டிராக்டர்களில் வந்து விற்பனை செய்யும் நபர்களிடம் குடம் ரூ. 5 செலுத்தி வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  
பொதுமக்களின் அவசிய தேவையான குடிநீரை முறையாக கிடைக்கச் செய்திட மாவட்ட ஆட்சியர் உரிய 
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.