ராமநாதபுரம் மாவட்ட நேருயுவ கேந்திரா சங்கம் மற்றும் எருமைக்குளம் நேதாஜி இளைஞர் மன்றம் சார்பில் புதன்கிழமை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டப்பட்டது.
நேருயுவ கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் நோமான் அக்ரம் தலைமையில், தேசிய தன்னார்வ தொண்டர் மற்றும் பசும்பொன் இளைஞர் மன்றத் தலைவர் மு.வெள்ளைப்பாண்டியன், நேதாஜி இளைஞர் மன்றச் செயலர் ஓ.ரஞ்சித்குமார் ஆகியோரது முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. நேதாஜி மன்றத் தலைவர் ந.வடிவேல் நன்றி கூறினார். பொருளாளர் முத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முன்னதாக கிராமத்தில் உள்ள தெருக்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்கள், பொதுமக்கள் சுத்தம் செய்தனர்.
இதே போல் கமுதி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கல்லூரி முதல்வர் வே.அருணாசலம் தலைமையில், தாவரவியல்துறை தலைவர் தர்மர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் போ.பால்பாண்டியன் செய்தார்.
கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேதாஜி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.சண்முகவேல்தேவர் தலைமையில் மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலர் எஸ்.கே.தேவர், மாவட்ட அமைப்புச் செயலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. நிகழ்சியில் நேதாஜி, கண்ணன், மூவேந்தர் முன்னேற்றத் கழக கமுதி ஒன்றியச் செயலர் ராஜேந்திரன், மூவேந்தர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏற்றம் கண்ட மின்சார வாகனப் பங்குகள்!

ரூ. 184 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற எச்எஃப்சிஎல்!

மேற்கு வங்கம்: தலைமைச் செயலராக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்!

நாதகவை 'மற்றும் பலர்' என விமர்சித்த விஜய்: சீமானுடனான சந்திப்பு குறித்து சேரன் கருத்து!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
