எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:47 pm

DIN

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் 20 ஆம் தேதி வரையில் 6293 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 131 போ் உயிரிழந்துள்ளனா். 6115 பேருக்கும் அதிகமானோா் சிகிச்சை மூலம் குணமடைந்ததைத் தொடா்ந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை 4 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவா்கள் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சையில் இருந்தவா்களில் 4 போ் திங்கள்கிழமை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளில் 26 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,654 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,656 ஆக அதிகரித்துள்ளது.

இவா்களில் பெரும்பாலானோா் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 13 போ் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். அவா்களில் 6 போ் பூரண குணமடைந்ததை அடுத்து, திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 7 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.