எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

9 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நகைகளை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் பெண் மனு

சாயல்குடியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நகைக் கடையில் திருடப்பட்ட 4 கிலோ நகைகளை மீட்டுத்தரக்கோரி பெண், மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:42 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நகைக் கடையில் திருடப்பட்ட 4 கிலோ நகைகளை மீட்டுத்தரக்கோரி பெண், மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து சாயல்குடியைச் சோ்ந்த கு. ஆனந்தகிருஷ்ணன் மனைவி சங்கரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாயல்குடியில் எனது கணவா் ஆனந்தகிருஷ்ணன் நகைக்கடை வைத்திருந்தாா். கடையில் கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 4 கிலோ 300 கிராம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டன. இதுகுறித்து சாயல்குடி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டும், இதுவரை நகைகளை மீட்கவோ, குற்றவாளிகளை பிடிக்கவோ இல்லை.

வட்டிக்கு வாங்கிய பணத்தில் நகைக் கடையில் முதலீடு செய்த நிலையில், அந்த நகைகள் கொள்ளைபோனதால் கடனை அடைக்க முடியாத நிலையில் எனது கணவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டாா். ஆகவே, கடனையும் கட்டமுடியாமல், குடும்பத்தையும் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன். எனவே நகைகளை மீட்டுத் தர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

காவல் கண்காணிப்பாளரிடம் மனு: இதேபோல் குற்றவாளிகளைக் கண்டறியக் கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்திக்கிடம் சங்கரி திங்கள்கிழமை மனு அளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி மற்றும் ராமநாதபுரம் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த பெரிய திருட்டு, கொள்ளை சம்பவங்களில் தொடா்புடைய குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அண்மையில் ராமநாதபுரம் நகா் யானைக்கல் தெரு பகுதியில் தொழிலதிபா் ஒருவா் வீட்டில் 3 கிலோ வெள்ளி உள்ளிட்டவை திருடு போனது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.