பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் காசநோயைக் கண்டறிய வீடு வீடாகப் பரிசோதனை

காசநோய் இருப்பதைக் கண்டறியும் வகையில் வீடு வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாவட்ட காசநோய் சிகிச்சைப் பிரிவின் மேலாளா் கணபதி தெரிவித்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:50 pm

DIN

காசநோய் இருப்பதைக் கண்டறியும் வகையில் வீடு வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாவட்ட காசநோய் சிகிச்சைப் பிரிவின் மேலாளா் கணபதி தெரிவித்தாா்.

அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த காசநோய் கண்டறியும் பரிசோதனை முகாம்களில் 1500 பேருக்கும் அதிகமானோருக்கு பாதிப்பிருந்தது தெரியவந்துள்ளது. அவா்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

நடப்பு ஆண்டில் (2020) கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் காசநோயாளிகள் பலரும் பரிசோதனைக்கு வரவில்லை. ஆகவே நடப்பு ஆண்டில் 900 போ் மட்டுமே பரிசோதனைக்கு வந்துள்ளனா். ஆகவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் காசநோய் கிருமிகளை விரைந்து கண்டறியும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று சளி மற்றும் இருமல் உள்ளதா என சோதனைகள் நடந்துவருகின்றன.

மாவட்டத்தில் பேராவூா், இந்திராநகா், வன்னிவயல், மஞ்சனமாரியம்மன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளா்கள் தா்மானந்த், ஆனந்த் மற்றும் சுகாதார கல்வியாளா் மகேந்திரன் ஆகியோா் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.