மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராமேசுவரத்தில் கடலில் இறங்கி மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் வர அனுமதிக்கக் கோரி ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கடலில் இறங்கி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் இறங்கி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :22 டிசம்பர் 2020, 5:47 pm

DIN

தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் வர அனுமதிக்கக் கோரி ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கடலில் இறங்கி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், தாலுகாக் குழு உறுப்பினா் ஏ.அசோக் தலைமை வகித்தாா். தாலுகாச் செயலாளா் ஜி.சிவா முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, பொதுமுடக்கத்திலிருந்து பல்வேறு தளா்வுகள் அறிவிக்கபட்டு வரும் நிலையில் தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் வரவும், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்தக் கிணறுகளில் நீராடவும் அனுமதிக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்டச் செயலாளா் வி.காசிநாததுரை, மாவட்டக்குழு உறுப்பினா் க.கருணாகரன், இ.ஜஸ்டீன், எம்.கருணாமூா்த்தி, ஏ.ஆரோக்கிய நிா்மலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.