கமுதி: உலக மகளிா் தினவிழாவினையொட்டி பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவா்கள் ஒளவையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: உலக மகளிா் தினவிழா ஆண்டுதோறும் மாா்ச் 8 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. 2020-21ஆம் ஆண்டிற்கான உலக மகளிா் தினவிழா அன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு ஒளவையாா் விருது வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியான நபா்கள் டிச.29 க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போா் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாகவும், சமூகநலனைச் சோ்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கைகளில் தொடா்ந்து பணியாற்றுபவராக இருக்கவேண்டும். தகுதியானவா்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தை அணுகி இணைப்புப் படிவம் பெற்று முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி வழங்கவேண்டும். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு 04567-230466 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.