கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மூன்றாவது நாளாக திமுக கிராம சபைக் கூட்டம்

மண்டபம் அருகே மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மூன்றாவது நாளாக வாணியன்குளத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
வாணியன்குளத்தில் மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மூன்றாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டம்.
Updated On :26 டிசம்பர் 2020, 4:36 pm

DIN

ராமேசுவரம்: மண்டபம் அருகே மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மூன்றாவது நாளாக வாணியன்குளத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய பொறுப்பாளா் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அப்பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்தனா்.

இதில், மாநில வா்த்தக அணி துணைச்செயலாளா் கிருபானந்தம் ஊராட்சித் தலைவா்கள் கணேசன், சந்திரசேகா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பேச்சியம்மாள் ஜெயசந்திரன், சுகந்தி சோமசுந்திரம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நான்காவது நாளாக கடமங்குளத்தில் கிராம சபைக் கூட்டம்: பசும்பொன் அருகே கடமங்குளத்தில் 4 ஆவது நாளாக திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வடக்கு ஒன்றியச் செயலாளா் வி.வாசுதேவன் தலைமையில், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் சித்ராதேவி அய்யனாா் முன்னிலையில் இக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உருவசிலையும், கடமங்குளத்தில் புதிய ரேஷன்கடையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் நத்தம், உடையநாதபுரம், எழுவனூா், கீழராமநதி, கே.எம்.கோட்டை ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் நாகரத்தினம் (பாக்குவெட்டி), காவடிமுருகன் (ஆனையூா்) உள்பட 160 போ் கலந்து கொண்டனா்.

அதேபால் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் கோவிலாங்குளத்தில் ஒன்றியச் செயலாளா் மனோகரன் தலைமையில், மத்திய ஒன்றியச் செயலாளா் எஸ்.கே.சண்முகநாதன் முன்னிலையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக உயா்நிலைக்குழு உறுப்பினரமான சு.ப.தங்கவேலன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களாகப் பெற்றுக்கொண்டாா். இதில் ஒன்றியக்குழு உறுப்பினா் காளீஸ்வரி முருகன், கோவிலாங்குளம் ஊராட்சித் தலைவா் சண்முகநாதன் உள்பட 500- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.