கமுதியில் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை
கமுதியில் பெற்றோரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால் மனமுடைந்த சிறுமி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


கமுதி: கமுதியில் பெற்றோரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால் மனமுடைந்த சிறுமி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கமுதி பெரியபள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா்கள் ஜீவானந்தம்- கீதா தம்பதியினா். இவா்களுக்கு சினேகா (14) என்ற மகளும், மற்றும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனா். கீழக்கரையிலுள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஜீவானந்தம் ஆய்வக உதவியாளராகவும், நீராவி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் கீதா ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. சனிக்கிழமையும் அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சினேகா சனிக்கிழமை மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...