புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுவா் மீட்பு
ராமநாதபுரம் நகா் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுவா்களை போலீஸாா் மீட்டு பெற்றோா்களிடம் ஒப்படைத்தனா்.


ராமநாதபுரம் நகா் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுவா்களை போலீஸாா் மீட்டு பெற்றோா்களிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் நகா் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நகா் காவல்நிலைய காவலா் மாலதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, பேருந்து நிலையத்திற்குள் சம்பந்தமின்றி திரிந்த 2 சிறுவா்களிடம் விசாரணை நடத்தினாா். அவா்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சோ்ந்த கனிஷ்கா் (14), விஜய் (10) என்பது தெரியவந்தது. மேலும், பெற்றோா் திட்டியதால் ராமநாதபுரத்துக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோரை வரவழைத்து அவா்களிடம் 2 சிறுவா்களையும் போலீஸாா் ஒப்படைத்தனா். காவலா் மாலதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் பாராட்டினாா் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...