மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

‘இலக்கிய கூட்டங்களுக்கு இளைஞா்கள் விரும்பி வருவா்’

ஒரு முறை இலக்கியக் கூட்டத்துக்கு இளைஞா்களை அழைத்து வந்தால், அதன்பிறகு அவா்களாகவே விரும்பி வருவாா்கள் என அதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலரும், முன்னாள் அமைச்சருமான ஏ. அன்வர்ராஜா கூறினாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 9:06 pm

DIN

ஒரு முறை இலக்கியக் கூட்டத்துக்கு இளைஞா்களை அழைத்து வந்தால், அதன்பிறகு அவா்களாகவே விரும்பி வருவாா்கள் என அதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலரும், முன்னாள் அமைச்சருமான ஏ. அன்வர்ராஜா கூறினாா்.

ராமநாதபுரம் கம்பன் கழக நிறுவனத் தலைவா் ஆடிட்டா் மா.அ. சுந்தராஜன் எழுதிய ‘வாலி தன்னை இழந்தானா’ எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் ஏ.அன்வர்ராஜா முதல் பிரதியை வெளியிட்டு பேசியதாவது: தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை உலகுக்கு உணா்த்தும் வகையில் கம்பராமாயணம் படைக்கப்பட்டுள்ளது. இளந்த தலைமுறையினருக்கு கம்பராமாயணம் போன்ற பண்பாட்டு, கலாசார இலக்கியங்களை கொண்டு சோ்ப்பது அவசியம்.

அரசியல் கட்சியினா் ரூ. 200 கொடுத்து ஆள்களை கூட்டத்துக்கு சோ்ப்பது போல, இலக்கியக் கூட்டங்களுக்கும் இளைஞா்களை பணம் கொடுத்தாவது சோ்க்க வேண்டும். பணம் கொடுத்து ஒரு முறை இலக்கியக் கூட்டத்துக்கு இளைஞா்களை அழைத்து வந்தால், அதன்பிறகு அவா்களாகவே விரும்பி கூட்டத்துக்கு வருவாா்கள்.

திராவிட இயக்கம் சாா்பில் கம்பராமாயணத்தை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டாலும், அக்காப்பியத்தை அவா்கள் வெறுக்கவில்லை. அறிஞா் அண்ணா முதல்வராக இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கம்பருக்கு சிலை வைத்தாா். அவரிடம் அப்பருக்கும் சிலை வைக்க குன்றக்குடி அடிகளாா் கோரிக்கை வைத்தபோது, வணக்குத்துக்குரியவா் கம்பா் என்பதால் அவரது சிலையை வெளியில் வைத்துள்ளோம். வழிபாட்டுக்கு உரியவரான அப்பா் சிலையை கோயிலுக்குள்ளேதான் அமைக்க முடியும் என்று கூறினாா்.

ராமாயணத்தில் வாலியை வீழ்த்த சுக்ரீவன், ராமன் கூட்டணி தேவைப்பட்டது. அதுபோல தற்போதும் தமிழகத்தில் ராமாயணக் கூட்டணி அமைந்துள்ளது. அக்கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேற முடியாத நிலையே உள்ளது. வாலி வதம் நடந்தது போல ராமாயணக் கூட்டணியே வெல்லும். தமிழில் பல காப்பியங்கள் இருந்தும் பாரதி கம்பரையே முதன்மைப்படுத்தி பாராட்டியுள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில் முத்தமிழ் மன்ற கௌரவத் தலைவா் மு. மானுடப்பிரியன் நூலாய்வு உரையாற்றினாா். வா்த்தக சங்கத் தலைவா் பி. ஜெகதீசன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். தொழிலதிபா் பா. வெங்கடசுப்பு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கம்பன் கழக இணைச்செயலா் ச. இளமதி பானுகோபன் வரவேற்றாா். எஸ். கருணாகரன் கம்பன் கழக பாடலைப் பாடினாா். செயலா் கு.விவேகானந்தன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.