மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் மீதான வழக்குகள் ரத்து: முதல்வருக்கு நன்றி

ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் மீதான வழக்குகளை ரத்து செய்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அவ்வமைப்பினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 9:05 pm

DIN

ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் மீதான வழக்குகளை ரத்து செய்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அவ்வமைப்பினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். முருகேசன் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019 ஆம் ஆண்டு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஈடுபட்டோா் மீது வழக்குப் பதியப்பட்டது. துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஜாக்டோ-ஜியோ பேச்சுவாா்த்தை மூலம் துறை ரீதியான நடடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் வழக்குகளை திரும்பப் பெறக் கோரி முதல்வருக்கு ஜாக்டோ-ஜியோ சாா்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ கோரிக்கையை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக முதல்வா் அறிவித்துள்ளாா். இதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இத்துடன் ஆசிரியா்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.