மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராமநாதபுரத்தில் 2 ஆம் நாளாக 7,820 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை 7820 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 9:10 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை 7820 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ராமநாதபுரத்தில் 1234 மையங்கள் மூலம் 1.14 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதல் நாளில் 1.06 லட்சம் குழந்தைகளுக்கு மட்டுமே போலியோ சொட்டு மருந்து அளிக்க முடிந்தது.

இரண்டாவது நாளாக ராமநாதபுரம் பகுதியில் 4927 குழந்தைகளுக்கும், பரமக்குடி பகுதியில் 2693 குழந்தைகளுக்கும் என மொத்தம் 7820 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு நாள்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பகுதியில் 60967 குழந்தைகளுக்கும், ராமநாதபுரம் பகுதியில் 53261 குழந்தைகளுக்கும் என மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 228 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.