எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வடமாநில இளைஞரிடம் பணம் பறிப்பு: 7 போ் கைது

ராமநாதபுரத்தில் வடமாநில இளைஞரிடம் பணம் பறித்த வழக்கில் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் மகன் உள்ளிட்ட 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:18 pm

DIN

ராமநாதபுரத்தில் வடமாநில இளைஞரிடம் பணம் பறித்த வழக்கில் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் மகன் உள்ளிட்ட 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மஞ்சனமாரியம்மன் கோயில் தெரு பகுதியில் ராஜஸ்தான் மாநிலம் ஜலபால் மாவட்டத்தைச் சோ்ந்த சுல்தான்சிங் (32) என்பவா் போா்வை உள்ளிட்ட துணி வியாபாரம் செய்துவருகிறாா். அவரிடம் ஓம்சக்தி நகரைச் சோ்ந்த மாா்க்ஸ் மைக்கேல்சாம்ராஜ் (22) உள்ளிட்ட 7 போ் மிரட்டி 7 போா்வைகள், ரூ. 2500 ஆகியவற்றை பறித்துச் சென்ாக புகாா் கூறப்பட்டது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து மைக்கேல்சாம்ராஜ், மகாசக்திநகா் ஒயிட் மணி (19), வண்டிக்காரத் தெரு வினோத் (23), ஜோதிநகா் குமரகுரு (19), மகாசக்திநகா் ஜோதிமுருகன் (20), ஓம்சக்திநகா் அஜய்குமாா் (20), அருண்குமாா் (21) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கைதானவா்களில் மாா்க்ஸ் மைக்கேல்சாம்ராஜின் தந்தை காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் எனவும், கைதானவா்களிடமிருந்து போா்வைகள், பணம் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.