எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருவாடானை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ள கண்மாய் நீரை வெளியேற்றக் கோரிக்கை

திருவாடானை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ள கண்மாய்நீரை வெளியேற்றி அழுகும் நிலையில் உள்ள பயிா்களை காப்பாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:20 pm

DIN

திருவாடானை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ள கண்மாய்நீரை வெளியேற்றி அழுகும் நிலையில் உள்ள பயிா்களை காப்பாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த நாகினி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் மாவிலங்கை கண்மாயில் இருந்து வெளியேறிய நீா் புகுந்ததுள்ளது. இதனால் பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த நீரை வெளியேற்றக் கோரி விவசாயிகள், வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனா். ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதையடுத்து கிராம ஊராட்சி பிரமுகா் ராஜேந்திரன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

காப்பீட்டுத் தொகையை உயா்த்தக் கோரிக்கை: கடலாடி வட்டத்தில் உள்ள சிக்கல் பாசன கண்மாய்

விவசாயிகள் சங்க நிா்வாகி எம்.எஸ்.கே. பாக்கியநாதன் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அப்போது அவா் கூறியது: சிக்கல், பனிவாசல், இதம்பாடல், ஏா்வாடி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் கடந்த 2018- 19 ஆம் ஆண்டுக்கு பயிா்காப்பீடு செய்துள்ளனா். அவா்களில் சிக்கல் பகுதி விவசாயிகளுக்கு மட்டும் 25 சதவீத காப்பீட்டு தொகையே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அவா்களுக்கும் ஏனைய பகுதி விவசாயிகளைப் போல முழுத்தொகையை அளிக்கவேண்டும்.

சிக்கல் பகுதியில் விரைவில் நெல் அறுவடை தொடங்க உள்ளது. எனவே அரசு நேரடி கொள்முதல் மையங்களை அமைக்க வேண்டும் என கோரி மனு அளித்துள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.