எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:19 pm

DIN

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,340 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 132 போ் வரை உயிரிழந்துள்ளனா். 6,250-க்கும் அதிகமானோா் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுள்ளனா். இந்நிலையில் புதிதாக 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனிடையே, ஏற்கெனவே கரோனா சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் குணமடைந்ததால் திங்கள்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் 32 போ் மட்டும் தங்கி சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,713 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,714 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 3 போ் பூரண குணமடைந்ததை அடுத்து திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 2 போ் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.