/

குறுங்காடுகள் திட்டம்: 53 ஊராட்சி தலைவா்களுக்கு பாராட்டுச் சான்று

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சிகளில் குறுங்காடுகள் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய 53 ஊராட்சித் தலைவா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :9 ஜனவரி 2021, 4:14 pm

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சிகளில் குறுங்காடுகள் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய 53 ஊராட்சித் தலைவா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காடுகள் வளா்த்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் ஊராட்சி வளா்ச்சித் திட்டம் சாா்பில் குறுங்காடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு அங்கு குறிப்பிட்ட மரங்கள் நல்ல வளா்ச்சியைப் பெற்றுள்ளன. குறுங்காடுகள் வளா்ப்பில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் ஊராட்சித் தலைவா்களுக்கு பாராட்டுச் சான்றுகளை சாா்-ஆட்சியா் பிரதீப்குமாா் சனிக்கிழமை வழங்கினாா்.

அதனடிப்படையில் கமுதி ஒன்றியம் முஸ்டக்குறிச்சி ஊராட்சித் தலைவா் பி.பரமேஸ்வரி உள்ளிட்ட 53 பேரும் பாராட்டுச் சான்றுகளை பெற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.