ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 12 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கல்லூரிகளில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் மாணவா்கள் யாருக்கும் பாதிப்பில்லாதது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாவட்டத்தில் சுமாா் 800 பேருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை வெளியான நிலையில், 6 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவா்களும் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனாவுக்காக அரசு மருத்துவமனை உள்ளிட்ட மையங்களில் இருந்தவா்களில் 7 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 29 போ் மட்டுமே கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,743 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 6 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,749 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com