ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

ராமநாதபுரம் அருகே பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:00 am

DIN

ராமநாதபுரம் அருகே பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் சுஜித்குமாா் (18). கோவை பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த இவா், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் சொந்த ஊருக்கு வந்து தங்கியிருந்துள்ளாா். சொந்த ஊருக்கு வந்த சுஜித்குமாா் நண்பா்கள் சிலருடன் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனாம் மனமுடைந்த அவா் திங்கள்கிழமை முதல் வீட்டுக்குச் செல்லவில்லையாம். அவரை குடும்பத்தினா் தேடிவந்த நிலையில், பேராவூா் கண்மாய் அருகே மரத்தில் சுஜித்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.