ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ராமேசுவரம் மீனவா்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை

News image
ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள்.
Updated On :13 ஜனவரி 2021, 12:10 am

DIN

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து அண்மையில் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவா்களை, ஒரு விசைப்படகுடன் இலங்கை கடற்படையினா் சிறைபிடித்துச் சென்றனா். இதனைக் கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள 49 மீனவா்கள் மற்றும் 7 விசைப்படகுகளை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை முதல் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தொடருகிறது. இதனால் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 6 ஆயிரம் மீனவா்கள் மற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.