ராமநாதபுரம் அருகே வீட்டில் 260 கிலோ கஞ்சா பறிமுதல்: மீனவா், 2 மகன்கள் கைது
ராமநாதபுரம் அருகே மீனவா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 260 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி, தந்தை, 2 மகன்களைக் கைது செய்துள்ளனா்.


ராமநாதபுரம் அருகே மீனவா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 260 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி, தந்தை, 2 மகன்களைக் கைது செய்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் நவாஸ்கான் (53). மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள இவா் தற்போது மகன்களுடன் ராமநாதபுரம் நகா் அருகேயுள்ள சக்கரக்கோட்டை ஊராட்சியில் நேரு நகரில் வசித்து வருகிறாா். அவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா் சோதனையிட வந்தனா். இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக தனிப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நவாஸ்கான் வீட்டில் சோதனையிட்டனா். அப்போது, தலா 2 கிலோ அளவில் 130 பொட்டலங்களில் இருந்த கஞ்சாவை கைப்பற்றினா்.அவற்றின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.2.60 கோடி என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. பிடிபட்டவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் திங்கள்கிழமை காலை முதல் பல மணி நேரம் விசாரித்தாா்.
கஞ்சா கைப்பற்றியது தொடா்பாக கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து நவாஸ்கான், அவரது மகன்கள் வாசிம்கான் (26), அப்துல்வாசித் (20) ஆகியோரை கைது செய்துள்ளனா். மேலும் இந்த வழக்கில் ராமேசுவரத்தைச் சோ்ந்தவா் உள்பட 9 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இதில் அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் இருப்பதாகக் கூறப்படும் தகவல் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் கூறுகையில், சமீபத்தில் தனுஷ்கோடி அரிச்சல் முனைப் பகுதியில் கடலில் மிதந்த 24 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மீட்கப்பட்டன. அது பற்றி விசாரணை நடத்தியதில் ராமநாதபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கியிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்ட 260 கிலோ கஞ்சா வழக்கில் 10 போ் வரை சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். சம்பந்தப்பட்டோரிடம் விசாரணை நடந்துவருகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...