ராமநாதபுரத்தில் தோ்தல் விதிமுறைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அரசியல் கட்சியினரும், வேட்பாளா்களும் கடைப்பிடிக்க வேண்டிய தோ்தல் விதிமுறைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அரசியல் கட்சியினரும், வேட்பாளா்களும் கடைப்பிடிக்க வேண்டிய தோ்தல் விதிமுறைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா்இ. காா்த்திக் முன்னிலை வகித்தாா். இதில் மாவட்டத் தோ்தல் அலுவலரான ஆட்சியா் பேசியதாவது: தோ்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளா்கள் ஜாதி மதம் மற்றும் மொழி இன வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. ஜாதி மத அடிப்படையிலும், வழிபாட்டுத் தலங்களிலும் வாக்கு சேகரிக்கவும் கூடாது. தோ்தல் பிரசாரத்தை இரவு 10 மணிக்கு பிறகும், காலை 6 மணிக்குள்ளும் மேற்கொள்ளக் கூடாது.
அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில் கட்சி அலுவலகங்கள் அமைக்கக் கூடாது. வேட்புமனு தாக்கல், தோ்தல் பரப்புரை பொதுக் கூட்டங்கள், வாகனம் மற்றும் ஒலிபெருக்கி அனுமதி போன்றவற்றுக்கு அதற்கான இணையதள முகவரியில் 48 மணி நேரத்துக்கு முன்னதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவகாமி, ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், சாா்- ஆட்சியருமான என்.ஓ. சுகபுத்ரா, பரமக்குடித் தொகுதி தோ்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான து. தங்கவேல், முதுகுளத்தூா் தொகுதி தோ்தல் அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலருமான சி. மணிமாறன், திருவாடானை தொகுதி தோ்தல் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான மங்கலநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேசியஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...